Home ஏறாவூர் செய்திகள் ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் கைது

ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் கைது

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வன்முறையுடன் இடம்பெற்ற பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் .

கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான மூன்று பொலிஸ் குழுவினர் இணைந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறையின் போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள வீடியோ பதிவுகள் மூலம் பொதுமக்கள் தகவல்களை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

more news… visit here
READ MORE >>>  அமுலாகவிருக்கும் மின்வெட்டு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?
READ MORE >>>  அமுலாகவிருக்கும் மின்வெட்டு!
Previous articleலிட்ரோ நிறுவனத்திடம் இருந்து மகிழ்ச்சிகர செய்தி!
Next articleநாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொலிசாருக்கும் வழங்கப்பட்டது!