Home Jaffna News ஏன் திருடினேன்?… வேறு எங்கெங்கு திருடினேன்?: நெல்லியடியில் சிக்கிய திருடனின் வாக்குமூலம்!

ஏன் திருடினேன்?… வேறு எங்கெங்கு திருடினேன்?: நெல்லியடியில் சிக்கிய திருடனின் வாக்குமூலம்!

வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன் வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக குறிப்பிட்டுள்ளான்.

கடந்த 4ஆம் திகதி நெல்லியடி நகரிலுள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து கைவரிசை காட்டிய திருடன் குறித்த சிசிரிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன.

வர்த்தக நிலையத்திற்குள் குளிர்பானத்தை கண்டதும், முக மறைப்பை அகற்றி, குளிர்பானத்தை அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கைவரிசை காட்டிய 20 வயதான திருடன் நேற்று நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டான்.

மருந்தக உரிமையாளரான கிராம சேவகர், அந்த இளைஞனின் வசிப்பிடமான கரவெட்டி கிழக்கில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். அதனால் இளைஞனை முன்னரே அறிந்திருந்தார்.

இளைஞனின் சிசிரிவி காணொளிகளின் அடிப்படையில், குறிப்பிட்ட இளைஞனாகவே இருக்க வேண்டுமென பொலிசாரிடம் அடையாளம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நெல்லியடி பொலிசார் அந்த இளைஞனின் வீட்டை நோட்டமிட்ட போது, திருட்டுக்கு பயன்படுத்திய ஆடைகளை துவைத்து வீட்டுக்கு வெளியில் காயவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

திருட்டுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், திருடப்பட்ட பணம் ஆகியவையும் மீட்கப்பட்டன.

திருடனின் நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூரில் உள்ள இரண்டு திருடர்களிடம் திருட்டு பயிற்சி பெற்றதை குறிப்பிட்டுள்ளார். அவர்களின் உதவியாளராக, ஊரில் சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு வந்துள்ளான் கால்நடைகள், நீரிறைக்கும் மோட்டார் உள்ளிட்டவற்றை திருடி விற்பனை செய்து, போதைத் தேவைக்கான பணத்தை பெற்று வந்துள்ளான்.

பின்னர், தனது “ஆசான்களான இரண்டு திருடர்களையும்“ தவிர்த்து விட்டு தனித்தே திருட்டில் ஈடுபட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.

சில மாதங்களின் முன்னர் வல்லை முனியப்பர் ஆலயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பணப்பை திருடப்பட்டிருந்தது. அந்த பணப்பையில் இருந்த ஏரிஎம் அட்டையை பாவித்து பணம் பெறப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளில் இருந்து பணப்பையை திருடியது தான் என்பதை கைதான திருடன் ஒப்புக் கொண்டுள்ளான். பணப்பையில் இருந்த பணத்தை எடுத்து விட்டு, வெற்றுப்பணப்பையையும், ஏரிஎம் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் குறிப்பிட்ட இடமொன்றில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளான்.

ஏரிஎம் அட்டையின் மூலம் தான் பணம் பெறவில்லையென தெரிவித்தான்.

கைதான திருடன் இன்று (9) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளான். திருடன் மீது இரண்டு திருட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிபர் கைது
Next articleதாயின் அரவணைப்பில் இல்லாத 8 வயது சிறுவனை கம்பியால் கட்டிவைத்து அடித்த தந்தை கைது