ஏகே61 படத்தில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்க போகும் ஹச்.வினோத் !! கசிந்த உண்மை இதோ !!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பல வருடங்களுக்குப் பிறகு அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. அதில் ஒரு அஜித் வயதான அப்பா கதாபாத்திரத்திலும், அவருக்கு மகனாக மற்றொரு கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்கிறார் என்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

அதிலும் இளவயது அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார் என்ற வதந்தியும் பரவியிருந்தது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நம்பகதகுந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித் ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறாராம். ஏற்கனவே அஜித், தாடியுடன் கடுக்கன் போட்டிருந்த போட்டோ வெளியாகியிருந்தது. இந்த கெட்டப்புடன் தான் அஜித் ஏகே 61 படத்தில் இருப்பார் என்றும் 43 வயதுடைய மலையாள நடிகை மஞ்சு வாரியார் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மஞ்சு வாரியர் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் அஜித் எந்த கெட்டப் போட்டாலும் அதற்கேற்றார்போல் கலக்க கூடியவர்.

இதனால் எச் வினோத் எந்த தயக்கமும் இன்றி இந்த படத்தை நகர்த்தி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்சீரிஸ் உள்ளதுபோல வங்கி திருட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..