Home Local news எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா?

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா?

டிசெம்பர் மாதம் வரை தற்போதைய விலையில் எரிபொருளை வழங்கினால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சிடம் இருந்து 550 மில்லியன் அமெரிக்க டொலரை பெற வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின் பின்னரும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த முறை எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போது அமெரிக்க டொலர் 330 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 360 ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் நாளாந்தம் 1613 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 150 மில்லியன் அமெரிக்க டொலரை செலவிட வேண்டியிருந்தது, ஆனால், தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் மே மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதி 550 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 87 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசாங்கம் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றிற்கு 313 ரூபாயை செலவழிப்பதாக தெரிவித்த அவர், இன்னும் அரசாங்கம் டீசல் மற்றும் பெற்றோலுக்கு மானியம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கும் எதிர்கால எரிபொருள் கொள்வனவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் லங்கா ஐ.ஓ.சி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் ஆகியன அமைச்சரவையில் வெளிப்படையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெரும் திரள் போராட்டம்! இன்றைய தினம் முற்றிலும் ஸ்தம்பிக்குமா இலங்கை?
Next articleபொலிஸ் துப்பாக்கி சூடு!! பலர் வைத்தியசாலையில் !! பாலமுனையில் பதட்டம் நடந்தது என்ன????