Home Accident News எரிபொருள் பௌசர் கவிழ்ந்ததில் 4000 லீற்றர் விரயமானது..

எரிபொருள் பௌசர் கவிழ்ந்ததில் 4000 லீற்றர் விரயமானது..

பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உடுதும்பர- கோவில்மட பிரதேசத்தில் நேற்று (5) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பௌசரிலிருந்த 4000 லீற்றர் டீசல் வெளியேறியுள்ளதுடன், எஞ்சியுள்ள 2600 லீற்றர் டீசல் மீண்டும் பேராதனை எரிபொருள் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது பௌசரின் சாரதி மற்றும் உதவியாள் ஆகியோர் காயமடைந்து உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை உடதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை
Next articleஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு 3000