Home Cinema என்ன பார்க்க அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! கண்கலங்கிய...

என்ன பார்க்க அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! கண்கலங்கிய சிபிராஜ்

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர் வலிமை கொடுத்த தரமான வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சிபிராஜ் அப்பா பாக்க வரல அஜித் சார் என்ன ஹாஸ்பிடலுக்கு பார்க்க வந்தாரு என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை கொண்ட சமூக அக்கறை படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிஙக் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முதல்முறையாக அஜீத் வயதான தோற்றத்தில் நடித்து கலக்கி இருப்பார்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் பெண் ரசிகைகளை இந்த படம் கொண்டாட வைத்தது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை மூலம் முதல் முறையாக அஜித் உடன் கூட்டணி அமைத்து முதல் கூட்டணியே பிரமாண்ட வெற்றிபெற்ற சூழலில் இந்த கூட்டணி அடுத்ததாக பிரம்மாண்டம் கதை களத்தில் இறங்கியது.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக சுமார் இரண்டரை ஆண்டுகளாக உருவாகி வந்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி உலகமெங்கும் வெளியானது பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் படத்தில் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் பைக் ரேசிங் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் பாராட்டுக்களை பெற்றது. நேர் கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

READ MORE >>>  நடப்பு ஆண்டில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா? நீங்களே பாருங்க புரியும் !!

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் சிபிராஜ் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளது 1995ல் சத்யராஜும் அஜித்தும் இணைந்து நடித்து வந்த திரைப்படம் பகைவன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிபி ராஜ் பைக் ரேசிங் மிகவும் பிடிக்கும் என்பதால் வீட்டிலிருந்த டிவிஎஸ் 50 பைக்கை எடுத்து பைக் ரேசிங் செய்ய முயற்சித்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக செருப்பு எதுவும் அணியாமல் சென்ற சிபிராஜ் உடைந்த கண்ணாடி பாட்டிலுக்குள் மேலே காலை வைத்து அதில் காலின் பாதத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டு விட்டதாம் அப்போது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிபிராஜை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்தாராம். தன்னுடைய அப்பா சத்யராஜ் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியாமல் போனாலும் அஜித் தன்னை நேரில் வந்து சந்தித்த பழைய நினைவுகளை சிபிராஜ் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இந்திய அரசுக்கு பெருமை சேர்த்த அஜித் !!இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு
Previous articleயாழ். போதனாவில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது
Next articleமகிந்த – நாமல் – ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை!! பெயர் விபரங்கள்