Home Local news எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்

எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்

நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G முதல் L வரையிலான வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், இரவு 07.30 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், கொழும்பு முன்னுரிமைப் பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாடாளுமன்றை எப்போது கலைக்க முடியும்? அரசமைப்பிலுள்ள ஏற்பாடுகள் எவை?
Next articleபகிருங்கள் ;- நிஜமாகவே இலங்கையின் நிலை தான் என்ன?