Home Local news ஊரடங்கையும் மீறி தொடரும் போராட்டங்கள்

ஊரடங்கையும் மீறி தொடரும் போராட்டங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை 07 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கெதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக அங்கொடை பகுதியில் காவல்துறையின் பேருந்து மீது தீவைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று சிங்கராஜ வனப் பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமானதாகக் கூறப்படும் உணவகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகிந்த ஆதரவாளரான இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் நுகேகொட பகுதியில் உள்ள வீட்டின் மீது போராட்டக்காரர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை
Next articleகொழும்பில் இருந்து மகிந்த தப்பியது எப்படி