மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஊடகவியலாளர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இந்தியர் ஒருவர் போதைவஸ்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரிடம் இருந்து 11 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துக்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியில் சிற்றுாந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 8.5கிலோ கிராம் ஹசீஸ் மற்றும் 500 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர், இந்தியாவில் இருந்து பல்வேறு போதைப் பொருட்களை கடத்தி கொழும்பு முழுவதும் விநியோகம் செய்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.