உலகின் பயங்கரமானவர்களிடமிருந்து கோட்டபாயவுக்கு வந்த எச்சரிக்கை!

உலகில் மிக பயங்கரமான கணனி ஹெக்கர்கள் அணி எனக் கூறப்படும் எனோனிமஸ் அணியினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை ஹெக்கர்கள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி 14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அதிகாரங்களை புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் காணொளியில் கூறியுள்ளனர்.

ஒருவேளை ராஜபக்ச அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான தலைவர்கள் மறைத்து வைத்துள்ள சொத்துக்களை வெளியிட்ட அணியினர் என கருதப்படுகிறது.

அதேவேளை பென்டோர ஆவணங்கள், பனாமா ஆவணங்கள், விக்கிலீக்ஸ் என கடந்த காலங்களில் உலகில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் தகவல்களை இந்த அணியினரே வெளியிட்டுள்ளனர்.

இந்த அணியினர் ஏற்கனவே உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய படையினரின் தகவல்கள், பெயர்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..