யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி ரயில் ஓமந்தையில் மாடுகளுடன் மோதியத்தில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இச்சம்பவம் இன்று காலை 6.50 மணியளவில் வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றது.
வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 40வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்தவராவார்.
மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.