Home Cinema உண்மையிலேயே தசாவதாரம் 2ம் பாகம் வருமா? கேஎஸ் ரவிக்குமார் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ...

உண்மையிலேயே தசாவதாரம் 2ம் பாகம் வருமா? கேஎஸ் ரவிக்குமார் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ !!

கமல் 10 வேடங்களில் வித்தியாசமாக நடித்த படம் தசாவதாரம். அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கமல் எப்படி அத்தனை ரோல்களில் லுக் மற்றும் குரலை மாற்றி நடித்தார் என்பதே தற்போதும் பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.

அந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பற்றி கேட்கப்பட்டது. அதன் அடுத்த பாகம் வருமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

அது பற்றி பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘தசாவதாரம் படம் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட கமல் என்னிடம் போனில் நீண்ட நேரம் பேசினார். பலரும் தசாவதாரம் 2 பற்றி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் தசாவதாரம் போன்ற படத்தை எடுக்க முடியாது’ என கூறிவிட்டார்.

அதனால் தசாவதாரம் 2 வர வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது

more news… visit here
READ MORE >>>  சதீஷ் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தின் First லுக் இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்கள்.! மாஸ் காட்டும் கார்த்தி..! மார்க்கெட் எங்கேயோ போக போகுது
READ MORE >>>  காட்டுத் தீயை தடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார் கார்த்தி
Previous articleஇன்றைய ராசிபலன் இதோ 16.05.2022 !!
Next articleமிகவும் டைட்டான உடையில் மிரட்டும் அணு ஹாசன்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!