நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கென பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து போனிகபூர் பேசியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது வலிமை படம். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங்கில் அஜித் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அஜித் இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் 3வது முறையாக இணைந்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது வலிமை படம். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங்கில் அஜித் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அஜித் இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் 3வது முறையாக இணைந்துள்ளார்.
முன்னதாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பாகவே அமைந்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ஏகே61 படத்தை மிகவும் கவனமாக இயக்கி வருகிறார் ஹெச் வினோத். இதற்கென ஐதராபாத்தில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்கள் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளன.
பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு கெட்டப்புகளில் நடிகர் அஜித் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வில்லன் கேரக்டரின் கெட்டப் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகர் ஆதியுடன் அஜித்தின் இந்த கெட்டப் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
எப்போதுமே ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுப்பவர் தயாரிப்பாளர் போனி கபூர். ஆனால் இந்தப் படத்திற்கான அப்டேட் எதையும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளின்போது அவர் படம் குறித்து எந்த அறிவிப்பையாவது மேற்கொள்வார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது பேட்டியொன்றில் பேசியுள்ள போனிகபூர், இதுவரை 35 நாட்கள் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார். மேலும் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு கொடுத்துவரும் ஆதரவு மிகவும் பெரியது என்றும் தன்னுடைய மனைவியின் மூலமாகவே இந்த சிறப்பான ஆதரவு தனக்கு கிடைத்ததாக தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அஜித், உதயநிதி, ஆர்ஜே பாலாஜி போன்றவர்களின் சப்போர்ட்டும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.