Home Local news ‘உணவு ஒவ்வாமை’ – 300ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

‘உணவு ஒவ்வாமை’ – 300ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என தெரிவித்த ஊழியர்கள் இன்று காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை
Next articleபொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்