Home Health and Fitness உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

கேழ்வரகு

1970, 80கள் வரையிலும் நம்முடைய உணவுப் பழக்கத்தில் சிறுதானியம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. எப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ அப்போதே ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மறையத் தொடங்கின.

ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என பல மேற்கத்திய உணவு பழக்கங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதன் விளைவு ஒரு காலத்தில் தொற்றா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

கேழ்வரகு

தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கேழ்வரகு உணவு மிகவும் முக்கியமானது. கேழ்வரகு கஞ்சி, கூழ், தோசை, முருக்கு என கேழ்வரகைக் கொண்டு விதவிதமான உணவுகள் செய்தார்கள் நம் முன்னோர்.

இதனால் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கேழ்வரகின் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

கேழ்வரகு மிகவும் சிறிய சிறுதானியம். அரிசி போன்று இதை பாலீஷ் செய்ய முடியாது. அப்படியேதான் பயன்படுத்தியாக வேண்டும்.

கேழ்வரகு புரதச்சத்து நிறைந்த உணவு. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு தேவையான அளவுக்கு புரதச்சத்து கேழ்வரகிலிருந்து பெறலாம்.

கேழ்வரகில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் இதை உட்கொண்டதும் நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதைத் தடுக்கிறது.

எனவே, காலை உணவாக கேழ்வரகை எடுத்துக்கொள்ளலாம். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. அவை உடல் எடை குறைக்கத் துணை செய்கின்றன.

கேழ்வரகு

கேழ்வரகில் முதுமையைத் தாமதப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதால் சருமத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தில் அரிப்பு, கருவளையம், சருமம் பொலிவிழப்பது போன்ற பிரச்னைகள் வராமல் கேழ்வரகு பாதுகாக்கிறது.

இதில் வைட்டமின் இ நிறைவாக உள்ளது. இது புண்களை ஆற்றும். கேழ்வரகில் உள்ள புரதம் முடி உறுதியாக இருக்கச் செய்யும். முடி உதிர்வைத் தடுக்கும்.

கேழ்வரகில் கால்சியம் நிறைவாக உள்ளது. எனவே, எலும்பு உறுதியாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் கேழ்வரகில் 344 மி.கி அளவுக்கு கால்சியம் உள்ளது.

பாலூட்டும் தாய்மார்கள் பால் அதிக அளவில் சுரக்கக் கேழ்வரகு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள அமினோ அமிலங்கள் பால் சுரப்பைத் தூண்டுகின்றன. மேலும் கேழ்வரகில் இருந்து தாய் மற்றும் சேய்க்குத் தேவையான கால்சியம், இரும்புச் சத்தும் கிடைத்துவிடும்.

கேழ்வரகு

புரதம்

கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.

தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

நார்ச்சத்து

உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

கேழ்வரகு

குழந்தைகள்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும்.

கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

ஊட்ட உணவு

கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக இருக்கிறது.

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

பற்கள், எலும்புகள்

உடலுக்கு “கால்சியம்” சக்தி மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கேழ்வரகில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது.

வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

உடல் எடை

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

உடல் சூடு

மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது.

இந்த சமயங்களில் கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.

மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன.

கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.

கேழ்வரகு

தாய்ப்பால்

குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.

தோல்

சிலர் உடலை அதிகம் வருத்திகொண்டு உழைப்பதால் இளம் வயதிலேயே வயதானவர்களை போன்று தோற்றத்தை பெறுகின்றனர்.

கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி

தோலில் சுருக்கங்கள் ஏற்படுதல் குறைந்து தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஆபாசப் பேச்சு… போலீசாருக்கு சவால் : தலைமறைவாக இருந்த ‘பப்ஜி மதன்’ மாட்டினார்
Next articleசர்க்கரை நோயாளிகளின் நண்பன் கொய்யா இலை