அகதியாக 10 நாள் வீட்டில் தங்கியிருந்த உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம்: 10 வருட மனைவி பரிதவிப்பு!

உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம் யுவதிக்கு அடைக்கலம் கொடுத்த பிரித்தானிய குடும்பம் விபரீதத்திற்குள்ளாகியுள்ளது. 10 நாட்களில் உக்ரைன் யுவதியுடன் அந்த குடும்பத் தலைவர் ஓடிச் சென்றுவிட்டார்.

எட்டு வருடங்களாக தன்னுடன் குடும்பம் நடத்திய கணவர் ரொனி கார்னெட் (29), இரண்டு வாரங்கள் தங்கியிருந்த உக்ரைனிய அகதியுடன் ஓடிச் சென்று விட்டார் என மனைவி லோர்னா கார்னெட் (28) கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மேற்கு யார்க்ஸின் பிராட்ஃபோர்டில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, உக்ரைனிலிருந்து பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு தப்பிச் சென்றனர். பிரித்தானியாவும் பலருக்கு அடைக்கலம் கொடுத்தது. ரஷ்யாவிற்கு எதிரான மேற்குலக நிலைப்பாடு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் மேற்கு நாடுகள் – குறிப்பாக பிரிட்டன்- அதீத ஈடுபாடு காட்டியது. உக்ரைன் அகதிகள் விவகாரத்தை உணர்வுபூர்வ விடயமாக காண்பித்தது.

இதையடுத்து, பிரித்தானிய குடும்பங்கள் பல, உக்ரைனிய அகதிகளிற்கு தமது வீடுகளில் அடைக்கலம் கொடுத்தனர்.

உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம்

அப்படித்தான், உக்ரைனிலிருந்து தப்பி வந்த 22 வயதான , சோஃபியா கர்கடிமும் பிரித்தானியாவிற்கு வந்தார்.

அவர் உக்ரைனில் இருந்தபடி தனது உதவிக்கோரிக்கையை, Opora Homes for Ukraine தளத்தில் வெளியிட்டார். அந்த தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்பட, ரொனி கார்னெட் அவற்றை பார்த்து, அந்த யுவதிக்கு உதவ முன் வந்தார்.

6 மாத விசாவில் சோபியா பிரித்தானியா வந்தார்.

10 நாட்களின் முன்னர்தான் அவர் பிரித்தானியா வந்தார். சோஃபியாவை அவர்களுடன் தங்களுடைய வீட்டில் வசிக்கும்படி ரொனி- லோர்னா தம்பதியினர் அழைத்தனர்,

ஆனால் சில நாட்களிலேயே வில்லங்கம் ஆரம்பித்து விட்டதை லோர்னா அவதானித்தார்.

கணவர் ரொனி வேலையில் இருந்து திரும்பி வரும் நேரங்களில், சோபியா தன்னை அலங்கரித்துக் கொண்டு வீட்டுக்குள் சுற்றி வர ஆரம்பித்துள்ளார். குட்டை பாவாடை அணிந்து, சிவப்பு உதட்டுச்சாயம் அணிந்து சுற்றிவரத் தொடங்கியபோது தான் கவலைப்பட்டதாக லோர்னா கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே தனது கணவர் மீது சோபியா காதல் பார்வைகள் பார்த்து வந்ததையும், கணவரும் ‘பதில் சிக்கனல்கள்’ கொடுத்ததை கவனித்து வந்ததாகவும் லோர்னா தெரிவித்தார்.

ரொனி வேலையிலிருந்து திரும்பிய சிறிது நேரத்தில், ஏதோ அலுவலாக வெளியில் செல்லும் பாவனையில் சோபியா வெளியில் செல்வார். சற்று நேரத்தில் ரொனியும் வெளியில் செல்வார்.

இருவரும், ரொனியின் தாயார் வீட்டுக்கு சென்று படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதாக லோர்னா கூறுகிறார்.

ரொனி வேலைக்கு சென்று விட்டால், சோபியா அறைக்குள்ளேயே இருந்து விடுவார். ஆனால் வேலையால் வீடு திரும்பினால் தலையலங்காரம் செய்து, குட்டை பாவடையுடன் வெளியில் வந்து விடுவார்.

தன்னுடன் பேசுவதை சோபியா தவிர்க்க தொடங்கியதாக லோர்னா தெரிவித்தார்.

ரொனி ஸ்லோவாக்கிய மொழி பேசுவார். சோபியாவின் உக்ரைன் மொழிக்கு அது நெருக்கமானது. இதனால், ஒரேவீட்டில் இருந்தபடியே, லோர்னாவிற்கு தெரியாத அந்த மொழிகளில் இருவரும் காதல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

10 நாட்கள் பொறுத்து பார்த்த லோர்னா, விட்டால் விவகாரமாகி விடும் என நினைத்து, சோபியாவின் உடைமைகளை வீட்டுக்கு வெளியே எறிந்து, அவரை வீட்டைவிட்டு வெளியேறுமாறு சத்திமிட்டார்.

சோபியா வீட்டுக்கு வெளியில் செல்ல, தமிழ் சினிமா காட்சிகளை போல, சோபியாவுடன் செல்லப் போவதாக குறிப்பிட்டு, கணவர் ரொனியும் மனைவி, பிள்ளைகளை விட்டு சென்று விட்டார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10 வருடங்களாக வாழ்ந்த தன்னை உதவி, 10 நாள் அறிமுகமான பெண்ணடன் ரொனி சென்றுவிட்டதாக மனைவி லோர்னா தெரிவித்தார்.

இந்த விவகாரம் உக்ரைனிலும் பேசுபொருளாகி, சமூக ஊடகங்களில் சோபியாவை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

ரொனி வீட்டில் இருந்த போது, அவருடன் எந்த ‘கசமுசா’விலும் ஈடுபடவில்லையென தெரிவித்துள்ள சோபியா, உக்ரைனிலுள்ள தனது பெற்றோர் அவமானத்தில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ‘மன்மத ராணி’ பாணியில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், உக்ரைன் அகதிகளிற்கு உதவுபவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் என உக்ரைனியர்கள் தெரிவித்து, தமது பெற்றோரை திட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

லோர்னாவின் சந்தேகபுத்தியினாலேயே ரொனி வீட்டை விட்டு வெளியெறியதாகவும், இது கள்ளக்காதல் அல்ல, ‘தெய்வீககாதல்’ என குறிப்பிட்டு, அதை கொச்சைப்படுத்த வேண்டாமென்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உக்ரைனிய இளம் பெண்களிற்கு பிரித்தானிய குடும்பங்கள் அடைக்கலம் அளிப்பதில் இந்த சம்பவம் தாக்கத்தை செலுத்தும் என கருதப்படுகிறது.

உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம்! உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம்! உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம் உக்ரைன் யுவதியுடன் கணவர் ஓட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..