Home world news உக்ரைனின் நடந்த போரில் முக்கிய நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது !! வெளியான புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி

உக்ரைனின் நடந்த போரில் முக்கிய நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது !! வெளியான புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி

கிழக்கு உக்ரைனின் லைமன் நகரை ரஷ்ய படைகள் தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருப்பதை ரஷ்யா மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் உக்ரைனின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து பின்வாங்கப்பட்டு தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான லைமனை(Lyman) ரஷ்ய படைகள் முழுவதுமாக கைப்பற்றி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் வெளியிட்ட தகவலில், ரஷ்ய படைகள் லைமன் நகரை முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உளவுத் துறை அறிக்கையில், வடக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள உக்ரைனின் மூலோபாய நகரான லைமனின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன, இவை டான்பாஸ் தாக்குதல் நகர்வை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல ரஷ்யாவிற்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

உக்ரைனின் நடந்த போரில் முக்கிய நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது !! வெளியான புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி

என்னென்றால், லைமன் முற்றுகை என்பது சிவர்ஸ்கி டோனெட்ஸ் நதியை (Siverskyy Donets River) கையாளுவதற்கான முக்கிய ரயில் மற்றும் சாலை பாலங்களை ரஷ்ய படைகளுக்கு வழங்குகிறது என பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ரயில் மற்றும் சாலை பாலங்கள் டொனெட்ஸ்க் மாகாணத்தின் உள்நிலையில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் நகரங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தருகின்றன எனத் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் நடந்த போரில் முக்கிய நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது !! வெளியான புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி

மேலும் தற்போது சிவெரோடோனெட்ஸ்க் (Sieverodonetsk)நகரில் இருந்து கிழக்கு நோக்கி 40 கிமீ தொலைவில் ரஷ்ய படைகள் இருப்பதாகவும், லைமன் கைப்பற்றல் டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டத்தின் அடுத்த நகர்விற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் பிரித்தானிய உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநள்ளிரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை…பெண்கள் பாதுகாப்பு பற்றி உ.பி அரசு அதிரடி உத்தரவு
Next articleமஹிந்த, நாமலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு