ஏறாவூர் பகுதியில் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 4 இளைஞர்கள் தொடராக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய(21) தினமும் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் பணிபுரியும் ஏறாவூரைச் சேர்ந்த ஹாமில் (ஹமீன்) மரணமானார்.
வவுனியா பல்கலைக்கழகம் சென்று திரும்பிக்கொண்டிருக்கும்ப்போதே இந்த திடீர் (ஹாட் அட்டக்) மரணம் நிகழ்ந்துள்ளது.
திடீர் திடீரென மேற்படி இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றமை ஏறாவூரில் சோகத்தை அதிகரித்துள்ளது.
நல்லொழுக்கம் கொண்ட மேற்குறித்த இளைஞர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் வாசகர்கள் சார்பாக நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், அருளும் உண்டாவதாக!