Home Cinema இளம் வயதே ஆன கே ஜி எஃப் 2 எடிட்டர் – பட வாய்ப்புக்கு...

இளம் வயதே ஆன கே ஜி எஃப் 2 எடிட்டர் – பட வாய்ப்புக்கு பின்னாடி இப்படியொரு கதையா?

கே ஜி எஃப் 2 படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றிக்கு டபுள் மடங்கு இரண்டாம் பாகத்திற்கு கிடைத்துள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதை, பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என படம் முழுவதும் இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது எழுத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு அவர் ஒருவர் மட்டுமே காணம் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ன நினைக்கிறாரே அதை திரையில் கொண்டு வரவேண்டியது தொழில்நுட்ப கலைஞர்களின் பொறுப்பு. அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தின் எடிட்டிங் விமர்சகர்கள் ரசிர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றுள்ளது. உஜ்வால் குல்கர்னி என்ற 19 வயது இளைஞர் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். யூடியூப் வீடியோக்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து பிரபலமான உஜ்வல் குல்கர்னி

உஜ்வல் குல்கர்னி தனது ஸ்டைலில் கே ஜி எஃப் படத்தின் பாடலுக்கு எடிட் செய்து வீடியோ அப்லோட் செய்திருந்தார். அவரது எடிட்டிங் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு பிடித்து போக 19 வயதான உஜ்வல் குல்கர்னியை அழைத்து கே ஜி எஃப் பாகம் 2-க்கான ட்ரைலர் கட் வாய்ப்பு கொடுத்தார். உஜ்வல் பிரமாதமாக செய்துவிடவே மொத்த படத்திற்கான வேலையையும் இயக்குனர் நம்பி ஒப்படைத்தார்.

மேலும் படத்தை பார்த்த அனைவரும் அவரது பணியை பாராட்டி வருகின்றனர். தவிர, அவரது பணி பல திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்த்துள்ளது, நிச்சயமாக, அவர் விரைவில் பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் பணிக்கு கமிட் ஆவார் என்று கூறி வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரித்திகா சிங்கிற்கு அக்காவாக இறுதிசுற்று படத்தில் நடித்த நடிகையா இப்படி ? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி !!
Next articleசிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – ஒருவர் கொலை