Home Local news இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக  தயாரித்த கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தளம் கல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரியவந்துள்ளது.

டுபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமான சேவையின் EK-649 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக குறித்த இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

அவரது கடவுச்சீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகள்ள அந்த ஆவணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதில் வேறு ஒருவரின் கடவுச்சீட்டில் இந்த பெண்ணின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபாடசாலைக்கு சென்றிருந்த சிறுமி 50 ரூபாவுடன் மாயம்
Next articleஇலங்கைக்கு வந்த சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்!