பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியுள்ளார்.
அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல என தெரியவருகின்றது.
படத்தில் காட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் MOHOMAD MUSTAFA MOHOMAD HANIFA குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அவரே அங்கு பணியில் உள்ளார். ( i Road project Contacted by Nem)
தவறாக தன்னை சீன பிரஜை என தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.