Home Local news இலங்கை மக்களுக்காக புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை

இலங்கை மக்களுக்காக புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்கி, மக்கள் வாழ கூடிய சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்காக புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை

இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது.

அதேபோன்று தற்போதைய நெருக்கடியான நிலையிலும் நிவாரணங்கள் அடங்கிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக செயற்பட்ட அலி சப்ரியும் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 13/05/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleநாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு – நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல்