உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 728,000 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள், நாட்டை வந்தடைந்துள்ளன.
இன்று காலை ஜப்பானில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தி்ன் மூலம் கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஜப்பானில் இருந்து கடந்த 31ஆம் திகதி 728,460 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்அடிப்படையில், 1,456,460 தடுப்பூசிகளை இலங்கைக்கு ஜப்பான் நன்கொடையளித்துள்ளது.