இலங்கையில் மீண்டும் மெதுவாக அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று!

நாட்டில் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாகிறது.

இலங்கையில் கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த மாதம் வரை நாளாந்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே பதிவாகியிருந்த போதிலும், தற்போது நாளாந்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-25 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (14) 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 13 ஆம் திகதி 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆம் திகதி 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 ஆம் திகதி 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 ஆம் திகதி 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி 18 பேர், 7ஆம் திகதி 20 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (14) நிலவரப்படி 393 பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது கோவிட் தொற்றுக்குள்ளான 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..