இரண்டாவது நாளே காற்று வாங்கும் ‘பீஸ்ட் ‘ திரையரங்குகள்..!! தொடர்ந்து தோல்வியை நோக்கி செல்லும் சன் பிச்சர்ஸ்

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகி தற்பொழுது திரையரங்குகளில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் டாக்டர், இந்த படம் நகைச்சுவை கலந்த மசாலா படமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போன்று விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும் என அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

Beast

ஆனால் இந்த படம் திரைக்கு வந்து ஒரே நாளில், திரையரங்குகள் காற்று வாங்கிகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் பொதுவாக இந்த படம் குறித்து விஜய் ரசிகர்கள் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர், அதில் விஜய் ரசிகர் ஒருவர் பீஸ்ட் படம் குறித்து தெரிவித்ததாவது. நான் தளபதியின் உயிர் ரசிகன் தான், ஆனால் படம் சுமாராகத்தான் இருக்கிறது. படத்தில் கதையே இல்லை, நெல்சன் மட்டும் என் கையில் சிக்கினால் நாலு அறை அறைந்து விடுவேன்.அந்த மாதிரி படம் எடுத்து வைத்துள்ளார். ஒரு மண்ணும் இல்லை, அந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது. இதற்கு அட்லி பரவாயில்லை, நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை என தெரிவித்தார். மற்றொரு விஜய் ரசிகர் தெரிவித்ததாவது, படத்தில் வலுவான வில்லன் இல்லை என்றால் அந்த படம் தோல்வி தான் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஏமாற்றம்தான் அடைந்தோம், ஒவ்வொரு படத்திலும் விஜய் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

Vijay

கடைசியா கத்தி படத்திலிருந்து, தொடர்ந்து விஜய் எங்களை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார். விஜய்யிடம் இருந்து RRR மாதிரி ஒரு படத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் அவர் எங்களை ஏமாற்றி விட்டார். பீஸ்ட் படம் எஸ்.வி சேகரின் நாடகம் போன்று உள்ளது. விஜய்யின் அடுத்த படம் நன்றாக இருக்க வேண்டும். இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை, இந்த படத்திற்கு கடைசியாக வந்த மாஸ்டர் படம் எவ்வளவோ பரவாயில்லை.

Beast

மேலும் இந்த படம் நெல்சன் படமே இல்லை, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வந்த டாக்டர் படத்தில் இருந்த காமெடியில் ஒரு இருபது சதவீதம் கூட இந்தப் படத்தில் இல்லை. நான் விஜய்யுடன் தீவிர ரசிகன் காலையில் குளிக்க கூட இல்லை, படத்துக்கு வந்தேன், ஆனால் ஏண்டா இந்த படத்திற்கு வந்தேன் என்றாகிவிட்டது விஜய் ரசிகர்கள் படம் பார்த்த பின்பு குமுறி வருகின்றனர்.

Beast Vijay Movie

அப்படி கடந்த ஆண்டு சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

Thalapathy 66

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லைஇந்நிலையில், தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தயாரித்துள்ள சன் பிச்சர்ஸுக்கு, பீஸ்ட் படமும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் நன்றாக இல்லை விஜய்யின் ரசிகர்களே கூறுகின்றனர்.முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஜய் நடித்த படங்களுக்கே இப்படியொரு நிலைமையா என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Beast

டோரண்ட் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் ‘பீஸ்ட்’ ஆன்லைனில் கசிந்துள்ளது என்றும், அதைக் கூறும் பதிவு ஆன்லைனில் ட்ரெண்டிங்கில் உள்ளது. திரைப்படக் கொள்ளையர்கள் மீது தயாரிப்புக் குழு மிகவும் எச்சரிக்கையாக இருந்ததாகவும், திரையரங்குகளில் படத்தைப் பார்த்த நபர்களால் படம் கசிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆன்லைனில் கிடைக்கும் திருட்டு பதிப்பு குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..