Home கிளிநொச்சி செய்திகள் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர்

இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர்

கிளிநொச்சி – விவேகானந்தா நகர் பகுதியில் நேற்று பிற்பகல் 190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்திற்காக என தெரிவித்து மன்னாரிலிருந்து அங்கு வந்து தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 190 கிலோகிராம் எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதியையும், இதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய நபர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
READ MORE >>>  31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு
Previous articleதந்தைக்கு உதவியாக சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்
Next article9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து; இருவர் உயிரிழப்பு