Home Astrology இன்றைய ராசிபலன் – 22/05/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

இன்றைய ராசிபலன் – 22/05/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

இன்றைய பஞ்சாங்கம்

22-05-2022, வைகாசி 08, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பகல் 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.46 வரை பின்பு சதயம். மரணயோகம் இரவு 10.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிப்பலன் – 22.05.2022

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷப ராசி

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். எடுத்த காரியம் பாதியில் தடைபடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. அசையா சொத்துக்கள் வழியில் வீண் அலைச்சலும் பண விரயங்களும் ஏற்படும்.

சிம்மம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி

இன்று பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்களில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 03/06/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

மகரம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

கும்பம்

இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகமாகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

more news… visit here
READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்ம ராசி
Previous articleஇரும்பு கம்பியால் தாக்கிய காலிமுகத்திடல் தாக்குதல்தாரி கைது!
Next article9260 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த நபர் கைது ! 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்பு