Home ராசி பலன் இன்றைய ராசிபலன் இதோ 29.05.2022

இன்றைய ராசிபலன் இதோ 29.05.2022

மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: சந்திரன் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப் படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக்கொண்டுதவிப்பீர்கள். சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடு களை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பிரச்சினைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சிபொங்கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதி காரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்டம் பெருகும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் இருப் பதால் உங்களை அறியாமலேயே படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை கள் தருவீர்கள். நன்மைகள் கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்க ளுக்கு வளைந்து கொடுத்து செல்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகார்கள் பாராட்டுவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவி னர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகமலின் முன்னாள் மனைவியான நடிகை கெளதமியின் மகள் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
Next articleஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் இதோ !!