தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். நல்ல கதைகளை ரசிகர்களை கவரும் வகையில் படமாக்குவதில் வல்லவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் தனது சமீபத்திய படங்களுக்கு தமிழ் நாவல்களில் இருந்து கதைக்களத்தை எடுத்து வருகிறார். அவரது விசாரணைப் படம் லாக்கப் புத்தகத்திலிருந்தும், அசுரன் திரைப்பட எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலிலிருந்தும் தழுவி எடுக்கப்பட்டது. அவரது அடுத்த படம், வாடிவாசல், எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை அடிப்படையாகக் கொண்டது. வாடிவாசல் நாவல் தமிழ் சினிமாவின் உன்னதமான நாவல்களில் ஒன்றாக வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா…? என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக்காதது பெரும் வருத்தமே. கருவாடா இருந்தாலென்ன? கத்திரிக்காயா இருந்தாலென்ன? வரும்போது வரட்டும் என்கிற அலட்சியம் இவ்விரு ரசிகர்களுக்குமே இல்லை. வரவும் வராது…
இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத தகவல். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் அஜீத்திற்கு ஒரு கதை சொல்லி கவிழ்த்தாரல்லவா? அந்தப்படத்தைக் கூட போனிக்கபூர் தயாரிப்பதாக இருந்ததே… அங்குதான் புதிய திருப்பம்.
திடீரென வெற்றிமாறனை அழைத்தாராம் விஜய். எனக்கும் ஒரு கதை சொல்லுங்க என்று கேட்க, புல்லரிக்கும்படி இவருக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன் இந்தப்படம் பண்றோம். அதுவும் உடனே… என்று விஜய் வாக்குறுதி கொடுக்க… நிலைமை தர்மசங்கடம். முதலில் கதை கேட்டு ஓ.கே சொன்ன அஜீத்தா? உடனே தயாராகுங்க என்று கேட்கிற விஜய்யா? தடுமாறிப் போன வெற்றிமாறன், எதுக்கும் அஜீத் சார்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்றாராம்.
“ஒரு டென்ஷனும் இல்ல. முதல்ல விஜய் படத்தை பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றாராம் அஜீத்.
அடிச்சுக்குற ரசிகர்களே… இந்த பெருந்தன்மையை கவனிச்சீங்களா?
வாடிவாசல் படத்தில் சூர்யாவை தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் புகைப்படங்களை பகிர்ந்து அமீரின் பெயரை டேக் செய்து வருகிறார். அதேபோல அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்த தமிழரசனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. டெஸ்ட் ஷூட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.