Home Cinema இன்று வரை ஆர்.ஆர்.ஆர் செய்த மொத்த வசூல் ரிப்போர்ட் இதோ !!அம்மோவ்

இன்று வரை ஆர்.ஆர்.ஆர் செய்த மொத்த வசூல் ரிப்போர்ட் இதோ !!அம்மோவ்

ராஜமௌலி இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

ஆர்.ஆர்.ஆர் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பிரம்மாண்ட காட்சியமைப்பால் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வெளியானது முதல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த வசூலை எட்டியுள்ளது. இதுவரை 1000 கோடி வசூலை தாண்டிய இந்திய படங்கள் என்றால் தங்கல், பாகுபலி 2 மட்டும் தான். தற்போது ஆர்.ஆர்.ஆர் இந்த கிளப்பில் இணைந்துள்ளது.

RRR

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையில் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்ட மேலும் இருவர் உயிரிழந்தனர்.
Next articleCloth Remover – Prank App for the Body Show