Home Local news இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன.

இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.

காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதியின்கீழ், நாளைய தினம் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்ற மூவர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்
Next articleஇளம் வயதில் பருவ மொட்டாக கும்மென இருக்கும் சங்கீதா கிரீஷ்..! –புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!