இன்று முதல் பாடசாலைகளிற்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்டமாக அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் நேற்று (19) மூடப்பட்டன.
இரண்டாம் கட்டம் ஜூன் 6 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலைகளிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய ஆசிரியர், அதிபர்கள் இன்று பாடசாலைகளிற்கு செல்ல வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.