விஜய் நடித்த ‘பீஸ்ட் ‘ கடந்த வாரம் பல மொழிகளில் வெளியானது, மேலும் நடிகரின் பரந்த வெளியீடு பாக்ஸ் ஆபிஸில் ஒரு சில சாதனைகளை முறியடித்தது. ஆனால் இப்படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது, துரதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய்யின் 65வது படமான பீஸ்ட் நாளுக்கு நாள் வசூலில் குறைந்துகொண்டே வருகிறது.
50 நாட்கள் கூட தாக்கு பிடிக்காதோ என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. பலரும் படம் தோல்வியடைய காரணம் கதை மட்டுமே என கூறி வருகின்றனர், இதற்கு நெல்சன் என்ன பதில் கூறுவார் என தெரியவில்லை.
ஆனால் கதையில் படு மாஸ காட்டிவரும் Kgf 2 வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படத்தை வாங்கிய அனைவரும் லாபம் கிடைக்க செம குஷியில் உள்ளார்கள்.
பீஸ்ட்டை விட Kgf 2 படத்தின் உலகம் முழுவதிலான வசூல் விவரம் எங்கேயோ இருக்கிறது. பீஸ்ட் இதுவரை மொத்தமாக ரூ. 190 கோடியும், Kgf 2 ரூ. 645 கோடியும் உலகம் முழுவதிலும் வசூலித்துள்ளது.
பீஸ்ட் விஜய்யை ரா ஏஜென்டாகக் காட்டுகிறது, மேலும் அவர் மாலில் கடத்தப்பட்டவர்களைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான பணியை மேற்கொள்கிறார். விஜய்யின் அதிரடி அவதாரம் ரசிகர்களால் நன்றாக ரசிக்கப்பட்டது, அதே நேரத்தில் படம் நடுநிலையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் 38 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து முதல் நாளில் அதிக வசூல் செய்த படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட முடிந்தது.