தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் கார்த்தி. இவர் தற்போது இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது . விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் அக்டோபர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவரது நடிப்பில், விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் தயாராகி ரிலீஸ் தேதியும், அறிவிக்கப்பட்டுவிட்டது . அதன்படி, முதலில் விருமன் படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
சர்தார் படத்தை விரைவில் முடித்தால் அந்த படமும் இந்த ஆண்டு வெளியாகலாம். அப்படி வெளியானால் கார்த்தி நடிப்பில் இந்த வருடமே மூன்று படங்கள் வெளியாகிவிடும். இதனால் 3 படங்களின் மீது எதிர்பரப்பு அதிகமாக இருப்பதால், படம் அருமையாக இருந்தால் கார்த்தியின் மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.