தமிழ் சினிமாவில் ஆத்தா உன்கையில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி 2000ஆம் ஆண்டில் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்தார்.
ஒரு மகன் ஒரு மகள் இருக்கும் கஸ்தூரி மகளை வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் விட்டுவிட்டு மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
தற்போது சமுக கருத்துக்களை கூறி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
அது ஒரு படத்திற்கான காட்சியில் எடுக்கபட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கஸ்தூரி ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.