நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்துள்ள படம் டான். டாக்டர் படத்தினை வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரிய்ங்கா மோகன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், சரவணன் உள்ளிட்ட பல நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் டான் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் டான் படம் விஜய்யின் நண்பன் படத்தின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சத்யராஜை போன்ற பேராசிரியராக எஸ் ஜே சூர்யா, படிக்காமல் அனைத்திலும் தேர்வாகும் விஜய்க்கு மாறான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் என காப்பி அடித்துள்ளார் என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை கூறி வருகிறார்.