2022ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியல் வெளியீடு..!
2022ன் முதல் பாதி முடிய இருக்கிறது. 2022 ல் வெளிவந்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் நிலவரத்தை பார்க்கலாம்.
#1 வலிமை :
இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த படம். படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் படம் பெற்றாலும் அஜித் ரசிகர்கள், குடும்ப ரசிகர்கள் ஆதரவோடு தமிழ்நாட்டில் வசூல் மழை பொழிந்துள்ளது
#2 KGF
இந்திய சினிமாவிற்கே முக்கியமான படம். 1000 கோடி வசூலை செய்துள்ளது இந்தியா முழுவதும். இந்த படத்தின் வசூலை தாண்ட அடுத்த பிரஷாந்த் நீல் படம் தான் வரவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் வலிமை செய்த வசூலை விட கொஞ்சம் கம்மி.
#3 பீஸ்ட்:
இதுவரை 2022ல் வந்த தமிழ் படங்களில், அதிக வசூல் செய்த படம் ‘பீஸ்ட்’. இந்த படமும் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் ஆதரவோடு நன்றாக ஓடியது.
#4 RRR
பலமுறை படம் தள்ளிப்போனாலும் படத்தின் எதிர்பார்ப்பு குறையவில்லை, அது தான் ராஜமௌலி என்கிற பரந்து. இந்த படம் தான் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படமாக இதுவரை இருக்கிறது. இதுவும் 1000 கோடிகளை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த படம் 4ம் இடத்தில உள்ளது.
#5 டான்
இந்த வருடம் ரிலீசான தமிழ் படங்களில் proper ப்ளாக்பஸ்டர் என்றல் டான் தான். நல்ல விமர்சனங்களோடு இப்போதும் திரையரங்குகளில் நன்றாக வெற்றிநடை போடுகிறது.