தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்கள் லிஸ்டில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்த வாரம் டான் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ் ஜே சூர்யாவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
அவர் தான் படத்தின் மற்றொரு ஹீரோ எனவும் கூறப்படுகின்றது, இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா போஸ்டர் எங்கும் வரக்கூடாது ப்ரோமோட்ஷன் சம்மந்தப்பட்ட வேலைகளில்.
தன் புகைப்படம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று கடுமையாக சொன்னதாக தெரிவித்துள்ளார், இதை கேட்ட ரசிகர்கள் பலரும் என்ன இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்கிறார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.