அக்கரைப்பற்று திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட இத்திக்குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேச வாசிகளுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த சுமார் 15 மணிநேர போராட்டத்தின் பின்னரே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குடிநிலம் பகுதியில் வசிக்கும் 04 பெண் பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகநாதன் என்பவேரே (வயது 62) சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை 9.30 மணியளவில் குறித்த நபர் மண்டானை, இத்திக்குளத்தில் குளிப்பற்காக இறங்கியுள்ளார். இதன்போதே அவர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளார்.
அதன் பின்னர் குளக்கரையில் அவரது உடைகள் மற்றும் பாதணி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரதேச வாசிகளினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரேதச வாசிகளுடன் இணைந்து காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
அது மாத்திரமன்றி மீட்பு நடவடிக்கைக்காக கடற்படையினரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்த போதும்,
குளத்தின் ஆழமற்ற தன்மை மற்றும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்களால் தங்களது சேவைகளை வழங்க இயலாது போயுள்ளது.
தொடர்ந்தும் திருக்கோவில் பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச வாசிகள் மற்றும் மீன்பிடி தோணி என்பவற்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக இன்று அதிகாலை 12.45 மணியளவில் காணாமல்போன நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந் நிலையில் அவரது உடல் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மரண விசாரணை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை க்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப தகவல்களின் படி குறிந்த நபர் குளத்தில் உள்ள முதலையின் பிடியில் சிக்குண்டு காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய தகவல்கள் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு(Opens in a new browser tab)
post