இணையத்தில் வைரலாகும் 61 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட போனி !

அஜீத் குமார் ஏகே 61 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனது படத்தின் முதல் அட்டவணையை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான பேங்க் செட் அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தாக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம்.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பட நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம் இதோ

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..