Home Jaffna News ஆவா குழு காவாலிகளின் தலைவன் வினோத் துரத்தி துரத்தி வெட்டப்பட்டார்

ஆவா குழு காவாலிகளின் தலைவன் வினோத் துரத்தி துரத்தி வெட்டப்பட்டார்

வினோதன் என்று அழைக்கப்படும் ஆவா என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்று நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவா வினோதன் கர்ப்பிணியான மனைவியை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்று திரும்பிய போது வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த வினோதன் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது வாள் ஒன்று உடைவடைந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனி குழுவுக்கும் ஆவா குழுவுக்கும் இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கர்ப்பிணிகளுக்கான ’தடுப்பூசி வாரம்’
READ MORE >>>  துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலக குழு முக்கியஸ்தர் பலி!
Previous articleகுப்பைகளினாலும், தூர்வாரப்படாத வடிகான்களினாலும் பாரிய சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்கும் கல்முனை
Next articleயாழில் மோட்டார் சைக்கிளில் திரியும் மோகம்!! ஒரு மூட்டை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய பல்கலைக்கழக மாணவி!!