Home மட்டக்களப்பு செய்திகள் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகராசா கரிசனன் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணியானது காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியினை சென்றடைய முற்பட்டுள்ளது.இதனால் கரையில் நின்ற நண்பனின் உதவியினை நாடி காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.

கரையில் நின்ற நண்பனோ தோணியின் கயிற்றினை பிடித்து இழத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவத்துடன் தொடர்புபட்ட அவரது நண்பன ஜெ.சிந்துஜன் தெரிவித்தார்.

இறுதியில் அயலவர்களின் உதவியினை நாடியுள்ளனர்.அதற்குள் பயத்தின் காரணமாக தோணியில் இருந்தவர் ஆற்றில் பாய்துள்ளார். பாய்ந்தவரை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

இறுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சடலத்தினை மீட்டுள்ளனர். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவடிசாராயம் உற்பத்தி செய்த ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம்
Next articleபுதைக்கப்பட்ட உடலை மீளவும் தோண்டுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு