சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் டாக்டர் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. படம் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்து கடந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் இடம்பெற்றது.
தற்போது இந்த வருடம் டான் திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் கடந்த மே 13ம் தேதி வெளியானது.முதல் நாளில் இருந்தே படத்தின் வசூலுக்கு குறையே இல்லை. 4 நாளிலேயே படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது. தற்போது என்ன தகவல் என்றால் படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி-சிவகார்த்திகேயன் காட்சிகள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
காமெடி, சென்டிமென்ட் என எல்லா கலந்த கலவையாக படம் அமைய குடும்பத்துடன் பலரும் வந்து படத்தை காண்கின்றனர்.