ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்ட தங்காலை பகுதியைச் சேர்ந்த 37 ஆசிரியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தங்காலை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தங்காலை தங்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் மாவத்த பகுதியில் வசிக்கும் ஆசிரியர் மூவருடன் அதிபர் ஒருவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உட்பட நான்கு பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட 51 பேர் மீது நேற் றைய தினம் மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோத னையில் 33 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கொரோனா தொற்றார்கள் 37 பேரும் அம்பலாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.