மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினுடைய ஆர்ப்பாட்டப் பேரணியில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி செல்வதனால் தற்போது பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
பொலிஸாரின் வீதி தடைகளை அகற்றிவிட்டு மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.