Home Local news ஆதிவாசி ஒருவர் கொரோனாவால் பலி; தீவிரமடைந்தது கொரோனா பரவல்

ஆதிவாசி ஒருவர் கொரோனாவால் பலி; தீவிரமடைந்தது கொரோனா பரவல்

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பானை என்ற ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய எய்ச். எம். குணதாச என்ற ஆதிவாசியே  உயிரிழந்தவராவார்.

ஆதிவாசி ஒருவர் கொரோனாவால் பலி; தீவிரமடைந்தது கொரோனா பரவல்

இவ் ஆதிவாசி நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் அவஸ்தைபட்டு, சிகிச்சை பெற்று வந்தவராவார்.

இவர் நோய் காரணமாக, பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில், இவர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

ஆதிவாசிகளின் முதல் மரணம் இதுவென பதிவாகியுள்ளது.

தம்பானை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரியலாகே வன்னியலத்தோ, தமது கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியொருவர், கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்திருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்
Next articleதிங்கள் முதல் கட்டாயமாகும் நடைமுறைகள்; அறிவித்தது அரசு