ஏகே 61 படத்திற்காக கடுமையாக அஜித் எடை குறைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து இருக்கிறார். மேலும், வலிமை படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நோக்கி சென்று இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இதை படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ஏகே 61 படம் குறித்த அப்டேட் வெளியாகி வருவதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Tried my Level Best Twitter #AK Veriyargalaeee #AK61 https://t.co/mEgvVwZHqo
— vjpaaru (@parvathy_saran) May 16, 2022
இந்நிலையில் போனிகபூர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ஏகே 61 படம் குறித்து கூறியிருப்பது, அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவலும் அஜித்தின் புகைப்படமும் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வைரலாகி வருகிறார்கள்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பார்வதி ‘என்னால் முடிஞ்சா அளவு Try பண்ணிட்டேன் Ak வெறியர்களே ‘ என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Ajithkumar latest pic?❤️#AK61 pic.twitter.com/sdUh4UIwSO
— Chaitra Reddy✨️ (@ChaitraReddyoff) May 17, 2022
அஜித்தின் இந்த புதிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது