Home மட்டக்களப்பு செய்திகள் அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கிரான்குளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் நான்கு பெண்கள் அடங்களாக 21பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இரண்டு படகுகளையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவு எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களும் படகும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

Fb Img 1652949713586 Fb Img 1652949705810 Fb Img 1652949708741 1 Fb Img 1652949699451 Fb Img 1652949702731

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் இதோ 19.05.2022 !!
Next articleசூர்யாவை வைத்து பெரிய ஸ்கெட்ச் போடும் லிஜெண்ட் சரவணா? போஸ்டரை பார்த்து கதறும் சூர்யா ரசிகர்கள் !!