ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் புரட்சி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.