Home Cinema அல்லேக்கா அண்ணனின் கதாநாயகியை தன் பக்கம் வளைத்து போட்ட கார்த்திக் !! வெளியான அதிரடி அப்டேட்...

அல்லேக்கா அண்ணனின் கதாநாயகியை தன் பக்கம் வளைத்து போட்ட கார்த்திக் !! வெளியான அதிரடி அப்டேட் !!

சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. பின்னர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி ஈடுபட்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பின்னர் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியது.சென்னையில் சர்தார் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவினர் மைசூர் சென்றுள்ளனர். நடிகை ராஷி கண்ணா – கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டு வருகிறது.

அல்லேக்கா அண்ணனின் கதாநாயகியை தன் பக்கம் வளைத்து போட்ட கார்த்திக் !! வெளியான அதிரடி அப்டேட் !!

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரபல முன்னணி சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளார். லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Lalila

லைலா ஏற்கனவே சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். சர்தார் படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கிறார். இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் இதோ !!
Next articleபிரபல நடிகருக்கு தெரியாமல் வீட்டில் சன்னி லியோன் செய்த வேலையை பாருங்க! வைரல் வீடியோ !